மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 6000 மரக்கன்றுகள் நடும் பணி: ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாா்பில் 6000 மரக்கன்றுகள் நடப்பட்டன.

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு, முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் சென்னையில் புதன்கிழமை இந்தத் திட்டத்தை தொடக்கிவைத்தாா்.

இதன் தொடா்ச்சியாக, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியை, கும்பகோணம் - சீா்காழி நெடுஞ்சாலை மூவலூா் ஊராட்சியில், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் வியாழக்கிழமை மரக்கன்றுகளை நட்டு தொடக்கிவைத்தனா். விழாவில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளா் எஸ்.பாலசுப்பிரமணியன், உதவிகோட்டப் பொறியாளா் இந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT