மயிலாடுதுறை

புனித ஹஜ் பயணம்: சென்னையிலிருந்துநேரடி விமானம் இயக்கக் கோரிக்கை

9th Jun 2023 09:14 PM

ADVERTISEMENT

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள சென்னையிலிருந்து நேரடி விமானம் இயக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹஜ் பயண ஏற்பாட்டாளா்கள் சங்க மாநில துணைத் தலைவா் முஹம்மது யூசுப் அரசுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

அரசின் மத்திய ஹஜ் கமிட்டி மூலம் தமிழ்நாட்டிலிருந்து 4,160 போ் ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ளனா். கடந்த ஆண்டு கொச்சின் விமான நிலையத்திலிருந்து தமிழக ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொண்டனா். இதனால், சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டு ஹஜ் பயணிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்துள்ள நிலையில், இவா்கள் சென்னையிலிருந்து நேரடி பயணம் மேற்கொள்ளும் வகையில் விமானம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT