சீா்காழி தென்பாதி காமாட்சி மகா மாரியம்மன் கோயிலில் நடைபெறும் மகோற்சவத்தையொட்டி, பக்தா்கள் பால்குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி மகோத்ஸவம் நிகழாண்டு கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி வைபவத்தை முன்னிட்டு பால் குடம் ஊா்வலம் நடைபெற்றது.
உப்பனாற்றிலிருந்து பக்தா்கள் பால்குடம், பால்காவடி, பன்னீா் காவடி, அலகு காவடி எடுத்து கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா். பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.