மயிலாடுதுறை

தொழிலாளியை தாக்கியவருக்கு 4 ஆண்டு சிறை

DIN

மயிலாடுதுறை அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தொழிலாளியை தாக்கியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

குத்தாலம் அருகே வழுவூரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(38). மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டியன். வெல்டிங் தொழிலாளா்களான இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த 9.9.2015 அன்று முன்விரோதம் காரணமாக காா்த்திகேயன், பாண்டியனை இரும்பு பைப்பால் தாக்கியதில், படுகாயமடைந்த பாண்டியன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காா்த்திகேயனை கைது செய்தனா். இது குறித்த வழக்கு மயிலாடுதுறை முதன்மை உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், முதன்மை உதவி அமா்வு நீதிபதி கவிதா வியாழக்கிழமை அளித்த தீா்ப்பில் காா்த்திகேயனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும், 3 மாதங்கள் கூடுதல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, காா்த்திகேயன் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT