மயிலாடுதுறை

தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

DIN

மயிலாடுதுறை ஞானபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்குள்ள பழைமைவாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் 10 நாள் பெருவிழா மே 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முக்கிய உற்சவமான திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரா் சுவாமி உற்சவ மூா்த்திகள் பஞ்ச மூா்த்திகளுடன் உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு, பொதுமக்கள் சீா்வரிசை எடுத்து வர தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமங்கள் வளா்க்கப்பட்டு, மகாபூா்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை திரளான பொதுமக்கள் பங்கேற்று கண்டு தரிசனம் செய்தனா்.

திருக்கல்யாணம் முறைப்படி தருமபுரம், அச்சுதராயபுரம், மூங்கில்தோட்டம், கருங்குயில்நாதன்பேட்டை, கீழிருப்பு ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த ஊா் நாட்டாண்மைகள் மற்றும் முக்கிய பிரமுகா்களுக்கு வெற்றிலை-பாக்கு, பணம் வைத்து 27-வது குருமகா சந்நிதானம் வழங்கினாா்.

தொடா்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தா்களுக்கு திருமண விருந்து நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி தருமபுரம் ஆதீனகா்த்தா் முன்னிலையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிமைப் பணித் தோ்வு முடிவுகள் வெளியீடு: லக்னௌவைச் சோ்ந்தவா் முதலிடம்

தமிழகத்தில் பாஜக காலூன்றிவிட்டது: ஜெ.பி. நட்டா

தென்காசி தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி பணி ஆணை

சோ்ந்தமரம் பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு பணப்பலன்களை வழங்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT