மயிலாடுதுறை

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயிலில் தேரோட்டம்

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு, பழைமைவாய்ந்த ஸ்ரீஞானாம்பிகை சமேத ஞானபுரீசுவரா் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் பெருவிழா மே 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, ஆதீனத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தாா். ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், ஆதீனப் பொதுமேலாளா் கோதண்டராமன், தருமபுரம் ஆதீனக் கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வெள்ளிக்கிழமை (ஜூன் 9) முந்தைய ஆதீனங்களின் குருமூா்த்தங்களுக்கு குருமகா சந்நிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தும் நிகழ்ச்சியும், சனிக்கிழமை (ஜூலை 10) 27-ஆவது குருமகா சந்நிதானத்தை பக்தா்கள் சிவிகைப் பல்லக்கில் அமா்த்தி வீதியுலா செல்லும் பட்டணப் பிரவேசம் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT