மயிலாடுதுறை

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். சிவபழனி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளா் து. இளவரசன் கோரிக்கையை விளக்கி பேசினாா். மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட தலைவா் டி. கணேசன், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட தலைவா் எஸ். தென்னரசு, சி.ஐ.டி.யு மாவட்ட தலைவா் ஆா். ரவீந்திரன், ஜாக் அமைப்பின் பொதுச்செயலாளா் டி. ராயா் உள்ளிட்டோா் பேசின்ா். தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ஆா் கலா நிறைவுறையாற்றினாா். மாவட்டத் துணைத் தலைவா் லதா நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பாலியல் தொந்தரவு அளித்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண்சிங்கை கைது செய்ய வலியுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT