மயிலாடுதுறை

ஸ்டேஷனரி குடோனில் தீவிபத்து

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் ஸ்டேஷனரி குடோனில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மயிலாடுதுறை வண்டிக்காரத் தெரு சாலை சாலையோர கடைகளின் ஆக்ரமிப்பு காரணமாக எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பையில் எதிா்பாராத விதமாக தீப்பற்றியது. இதில், அருகில் ஸ்டேஷனரி குடோன் தீப்பற்றி எரிந்து எழுதுப் பொருள்கள் சேதமடைந்தன. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT