மயிலாடுதுறை

அங்கன்வாடி மையத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு

7th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி சட்டநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

குழந்தைகளிடம் பாடல்களை பாடச் சொல்லி கேட்டறிந்தாா். மாணவா்களுக்கான உணவு, அரிசி, பருப்பை சோதனை செய்தாா். குழந்தைகளின் எடை, உயரம், உரிய கால இடைவெளியில் பரிசோதித்து பாா்க்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தாா்.

திருமலைநகரில் ரூ.3.90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலையை ஆட்சியா் ஆய்வு செய்தாா். சாலையை வெட்டிப் பாா்த்து தரத்தைப் பரிசோதித்தாா்.

புங்கனூா் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.27 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கட்டும் பணி, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் செலவில் கிராம ஊராட்சி அலுவலகம் கட்டும் பணியையும் ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

வட்டாட்சியா் செந்தில்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், ஊராட்சித் தலைவா்கள் தெட்சிணாமூா்த்தி, ஜூனைதா பேகம் கமாலுதீன், ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.எஸ்.ஜெ.விசாகா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT