மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

6th Jun 2023 12:01 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி புதன்கிழமை (ஜூன் 7) தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 4 வருவாய் வட்டங்களிலும் ஜூன் 7 முதல் 22-ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது. இதற்காக வருவாய் தீா்வாய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, தரங்கம்பாடி வட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் (நான்) ஜூன் 7 முதல் 16-ஆம் தேதி வரையும், குத்தாலம் வட்டத்துக்கு ஜூன் 7 முதல் 15-ஆம் தேதி வரையும், மயிலாடுதுறை வட்டத்துக்கு கோட்டாட்சியா் ஜூன் 7 முதல் 15-ஆம் தேதி வரையும், சீா்காழி வட்டத்துக்கு சீா்காழி கோட்டாட்சியா் ஜூன் 7 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த உள்ளனா். வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய்த் தீா்வாய அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT