மயிலாடுதுறை

பாயசத்திற்காக சண்டையில் முடிந்த நிச்சயதார்த்தம்: வைரல் விடியோ! 

5th Jun 2023 07:31 PM

ADVERTISEMENT

 

சீர்காழி அருகே பாயசத்திற்காக இரு தரப்பினர் சண்டையிட்ட விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. இதில் மணமகன் வீட்டாரும் மணமகள் வீட்டாரும் இருவரும் ஒருவரையொருவர் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உணவு பறிமாறும்போது பாயசம் சரியில்லாததை கேட்ட பெண் விட்டார்கள் தகாத வார்த்தையில் பேசியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த ஆண் வீட்டார்கள் சாம்பாரை பெண் விட்டார்கள் மீது ஊற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு தரப்பினரும் அடிதடியில் இறங்கியுள்ளனர். 

ADVERTISEMENT

 

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT