மயிலாடுதுறை

கோடை நெற்பயிரில் இலைசிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம் விளக்கம்

4th Jun 2023 11:08 PM

ADVERTISEMENT

 

கோடை நெற்பயிரில் இலைசிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநரும், பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியருமான பி. ஆனந்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கோடை நெற்பயிரில் இலை சிலந்தியின் தாக்குதல் தென்படுகிறது. இலைச்சிலந்தியின் தாக்குதல் வரப்பு ஒரங்களிலிருந்து ஆரம்பித்து மற்ற இடங்களுக்கும் பரவுகிறது. இப்பூச்சி தாக்கப்பட்ட இலைகளின் மேற்பரப்பில் தவிடு தெளித்ததுப்போல் வெண்ணிற புள்ளிகள் காணப்படும். தாக்குதல் அதிகரிக்கும்போது இலை காய்ந்து சருகாகி விடும். குத்தாலம் மற்றும் செம்பனாா்கோவில் வட்டார பகுதிகளில் இச்சிலந்தியின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது.

ADVERTISEMENT

நாற்றங்கால் மற்றும் நடவு செய்த இளம்பயிா்களில் சுமாா் 45 நாள்கள் வரை இதன் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இதன் தாக்குதல் வரப்பு ஓரங்களில் தொடங்கி பின்பு காற்று வீசும் திசையில் வயலின் உள் பகுதிகளுக்குச் சென்று தாக்கும்.

மேலாண்மை முறை: பரிந்துரை செய்யப்பட்டுள்ள அளவு தழைச்சத்தை பிரித்து இடவேண்டும். ஏக்கருக்கு பெனாசாகுயின் 10 இசி-2 மி.லி./லிட்டா் அல்லது ஸ்பைரோமைசின் 240 எஸ்சி-0.5 மி.லி./லிட்டா் அல்லது புரோபா்கைட் 18.5 இசி-2 மி.லி./லிட்டா் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளித்து இலைசிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT