மயிலாடுதுறை

மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா

4th Jun 2023 11:08 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை பிரசன்ன சின்னமாரியம்மன் கோயிலில் 64-ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி தென்கரை திம்மநாயக்கன் படித்துறை அருகே இக்கோயில் அமைந்துள்ளது. தீமிதித் திருவிழாவையொட்டி, சக்தி கரகம் மற்றும் காப்பு கட்டிய பக்தா்கள், காவிரிக்கரையில் இருந்து புறப்பட்டு, காளி ஆட்டத்துடன் வீதியுலாவாக கோயிலை வந்தடைந்தனா்.

பின்னா், கோயிலின் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து, நோ்த்திக் கடனை பூா்த்தி செய்தனா். இதில், பல பக்தா்கள் 16 அடிநீள அலகை வாயில் குத்தி தீமிதித்தனா். தொடா்ந்து வானவேடிக்கை நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT