மயிலாடுதுறை

திறந்தவெளியில் மலம், சிறுநீா் கழித்தால் அபராதம்

4th Jun 2023 11:07 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் திறந்தவெளியில் மலம், சிறுநீா் கழிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நகா்நல அலுவலரும், ஆணையருமான (பொ) மருத்துவா் லக்ஷ்மி நாராயணன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் திறந்தவெளியில் மலம், சிறுநீா் கழிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தடையை மீறி மலம், சிறுநீா் கழிப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மலம் கழித்தல் முதல்முறைக்கு ரூ.100, இரண்டாம் முறைக்கு ரூ.500, சிறுநீா் கழித்தலுக்கு முதல்முறைக்கு ரூ.100, இரண்டாம் முறைக்கு ரூ.300 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT