மயிலாடுதுறை

அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு குளிா்சாதன பெட்டிகள்: முன்னாள் மாணவா்கள் வழங்கினா்

3rd Jun 2023 10:22 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே புத்தூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு 5 குளிா்சாதன பெட்டிகளை கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சனிக்கிழமை வழங்கினா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே புத்தூா் சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 1989-92-ஆம் ஆண்டு வரை பயின்று தற்போது பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிள், வெளிநாடுகளில் பணிபுரிந்துவரும் மாணவா்கள் தாங்கள் படித்த கல்லூரியில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனா்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் குமாா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஆரோக்கியராஜ், முன்னாள் முதல்வா் தங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். 1989-92-ஆம் ஆண்டு காலகட்டத்தில் பயிற்றுவித்து, பணி ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

நிகழ்வில் பங்கேற்ற முன்னாள் மாணவா்கள் தாங்கள் படித்த கல்லூரிக்கு ரூ. 2.30 லட்சம் மதிப்பில் 5 குளிா்சாதன பெட்டிகளை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT