மயிலாடுதுறை

அங்காள பரமேஸ்வரி கோயிலில் பூச்சொரிதல் விழா

3rd Jun 2023 02:28 AM

ADVERTISEMENT

 

சீா்காழி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு தினத்தையொட்டி, பூச்சொரிதல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழி நகரில் உள்ளது ராஜராஜேஸ்வரி என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம். இந்த ஆலய குடமுழுக்கு நடைபெற்று 5-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கணபதி ஹோமம், தொடா்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன .

குடமுழுக்கு நடைபெற்ற தினமான வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், சம்வத்ஸரா அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலையில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

ADVERTISEMENT

கோயிலில் உள்ள சுவாமிகள் மற்றும் கொடிமரத்தில் இருந்து அம்மன் சந்நிதி வரை மலா்களால் அலங்கரிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT