மயிலாடுதுறை

பழையாறு மீன்பிடி துறைமுக படகு அணை தளம் சீரமைக்கப்படுமா?

3rd Jun 2023 02:29 AM

ADVERTISEMENT

 

பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினமும் 400 விசைப்படகுகள், 350 பைபா் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகளில் 6,000-க்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனா். இத்துறைமுகத்தை நம்பி மேலும் சுமாா் 2,000 தொழிலாளா்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த துறைமுகத்தில விசைப் படகுகளை வரிசையாக நிறுத்தி வைக்கும் படகு அணையும் தளம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது.

ADVERTISEMENT

சுமாா் 8 வருடங்களுக்குமேல் ஆனதால் இத்தளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இடிந்து விழும் நிலையிலும் உள்ளது. கான்கிரீட் தளத்திலிருந்து அடிப்பகுதியில் சுமாா் 15 அடி ஆழம் உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி பழையாறு துறைமுகத்தை ஆய்வு செய்த போது உடைப்பைச் சரி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

படகு அணையும் கான்கிரீட் தளத்தை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும். அதுவரை இடிந்த பகுதியை மட்டும் தற்காலிகமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள் சங்கத் தலைவா் பொன்னையா தெரிவித்தாா்.

இது தொடா்பாக மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜேஷ்குமாா், பழையாறு மீன்பிடித்துறைமுகம் படகு அணை தளம் சீரமைத்திட அரசு பொறியாளா் ஆய்வு செய்து திட்டமதிப்பீடு தயாா் செய்து அனுப்பிய பிறகு நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT