மயிலாடுதுறை

மின்சார வாகனங்களுக்கு மாற விழிப்புணா்வு

3rd Jun 2023 10:18 PM

ADVERTISEMENT

சீா்காழி மின்சார வாரியம் சாா்பில் இரண்டு, நான்கு சக்கர வாகன உபயோகிப்பாளா்கள் காற்று மாசு ஏற்படுவதைத் தவிா்க்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துவதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது.

சீா்காழி புதிய பேருந்துநிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா் விஜயபாரதி, இளமின் பொறியாளா் முத்துக்குமாா், உதவிப் பொறியாளா் சுபத்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மின்வாரிய அலுவலா்கள், ஊழியா்கள் ஒலிபெருக்கி மூலம் மின்சார வாகனத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT