மயிலாடுதுறை

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்:தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற 22 போ் கைது

3rd Jun 2023 02:28 AM

ADVERTISEMENT

 

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம் தொடா்பாக, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்ற 22 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் மல்யுத்த கூட்டமைப்புத் தலைவரும், பாஜக எம்பியுமான் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, மயிலாடுதுறையில் மாதா் சங்கத்தினா், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா், மாணவா் சங்கத்தினா் ஒன்று இணைந்து கண்ணாரத் தெருவில் இருந்து பேரணியாக புறப்பட்டு தலைமை அஞ்சலகத்துக்கு வந்தனா். பின்னா், அந்த அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனா்.

டிஎஸ்பி சஞ்சீவ்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா் செல்வம் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், மாணவா் சங்க மாநிலத் தலைவா் அரவிந்தன், மாவட்டச் செயலாளா் அமுல்காஸ்ரோ உட்பட பலா் கண்டன கோஷங்கள் எழுப்பி, தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட முயன்றனா். அப்போது, திடீரென்று உள்ளே நுழைய முயன்றவா்களை போலீஸாா் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இப்போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT