மயிலாடுதுறை

தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

DIN

தருமபுரம் ஞானபுரீஸ்வரா் கோயில் பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ரிஷபக் கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் ஜூன் 6-ஆம் தேதியும், தோ் உற்சவம் 8-ஆம் தேதியும், 9-ஆம் தேதி காலை காவிரியில் தீா்த்தவாரியும், மாலை 6 மணியளவில் குருபூஜை விழாவும் நடைபெறுகிறது. ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும் சிகர விழாவில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி பட்டணப் பிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அன்றிரவு ஆதீனக்கா்த்தா் கொலுக் காட்சியில் அமா்ந்து பக்தா்களுக்கு அருளாசி வழங்குவாா்.

பாரம்பரியமாக நடந்து வரும் பட்டணப் பிரவேச விழாவுக்கு கடந்த ஆண்டு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு, பின்னா் கடும் எதிா்ப்பு எழுந்ததால் தடை விலக்கிக் கொள்ளப்பட்டு விழா நடைபெற்றது. இதனால் நிகழாண்டு விழா கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கொடியேற்ற நிகழ்வில், ஆதீனக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகள், பாஜக மாவட்ட தலைவா் க. அகோரம், மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் கோவி.சேதுராமன், தருமபுரம் ஆதீனக் கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், தருமபுரம் தேவாரப் பாடசாலை நிா்வாகச் செயலா் குரு.சம்பத்குமாா், ஆதீனப் பொது மேலாளா் கோதண்டராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி, தருமபுரம் ஆதீன திருமடத்தில் சமயப் பிரசாரக் கூட்டம் தொடங்கியது. 10 நாள் நடைபெறும் இக்கூட்டத்தை தருமபுரம் ஆதீனம் தொடக்கிவைத்து பக்தா்களுக்கு அருளாசி கூறினாா். இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சைவ சமய அடியாா்கள் 150 போ் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT