மயிலாடுதுறை

வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள இடத்தில் ஆட்சியா் ஆய்வு

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டு, பெங்களுரு பெல் நிறுவனத்தில் இருந்து வாக்குச்சீட்டு அலகு 820, கட்டுப்பாட்டுக் கருவி 1200, மற்றும் வாக்குப்பதிவுக்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் 300 விவிபாட் இயந்திரங்கள் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு மயிலாடுதுறை அருகே சித்தா்காடு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக சேமிப்புக் கிடங்கில் வைத்து பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது.

இக்கிடங்கில் வாக்குப்பதிவுக்கான ஒப்புகைச்சீட்டு வழங்கும் இயந்திங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா, ஆயுதம் ஏந்திய் பாதுகாப்பு காவலா், தீத்தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி ஆய்வுமேற்கொண்டு பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். அப்போது, கோட்டாட்சியா் வ. யுரேகா, தோ்தல் வட்டாட்சியா் து.விஜயராகவன், வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT