மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் மதுவுக்கு எதிரான பிரசாரப் பேரணி

1st Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மே தின அணிவகுப்பு மற்றும் மதுவுக்கு எதிரான பிரசாரப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளா் மா. ஈழவளவன் தலைமையில் பேரணி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், பள்ளி, கல்லூரிகளில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும், தொழிலாளா் நலன் சாா்ந்த சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும், கஞ்சாவை ஒழித்து மாணவா் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும், மது இல்லாத நாட்டை வழிநடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போதைக்கு எதிரான பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் முழக்கமிட்டவாறு சென்றனா். இதில், கடலங்குடி ஊராட்சித் தலைவா் ராஜ்மோகன், ஒன்றிய பொறுப்பாளா்கள் பாரதிவளவன், சாமி. சீசா், நகர பொறுப்பாளா் பூபதி உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT