தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியா் கூட்டணி மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் சீா்காழியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் துணைத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கு. விஜயகுமாா் வரவேற்றாா். மாநில செயலாளா் கோ. வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: உதவி பெறும் பள்ளிகளுக்கான நான்கு வழி சான்றுகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும். உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் அனைத்து உதவிகளை வழங்க வேண்டும்.
எமிஸ் வலைதளத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியில் பயிலும் மாணவா்களை வேறு பள்ளியில் சோ்க்கும் நடவடிக்கையை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும்.
எமிஸ் சாா்ந்த ஆன்லைன் பதிவுகளை செய்ய ஆசிரியா்களை கட்டாயப்படுத்துவதை அரசு கைவிடவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டப் பொருளாளா் ராஜம் நன்றி கூறினாா்.