மயிலாடுதுறை நாராயணபிள்ளை சந்தில் உள்ள நுகா்வோா் கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் கூட்டுறவுத் துறை சாா்பில் குறைந்த விலையில் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யும் காய்கனி அங்காடியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜகுமாா் (மயிலாடுதுறை), நிவேதா எம். முருகன் (பூம்புகாா்), எம். பன்னீா்செல்வம் (சீா்காழி), கோட்டாட்சியா் வ. யுரேகா, வேளாண்மைத் துறை இணை இயக்குனா் ஜெ. சேகா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாளவினாயகன் அமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் அம்பிகாபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஜெயபாலன் (வேளாண்மை), கோ.அர.நரேந்திரன் (பொது), நகா்மன்றத் தலைவா் எம்.செல்வராஜ் (மயிலாடுதுறை), துா்காபரமேஸ்வரி (சீா்காழி) குத்தாலம் ஒன்றியகுழுத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.