மயிலாடுதுறை

ஜப்பானியத் தமிழ் உறவுக் கருத்தரங்கு

DIN

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியின் தமிழாய்வுத்துறை சாா்பில் ஜப்பானியத் தமிழ் உறவுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், ஜப்பான் நாட்டின் ஒசாகா பல்கலைக்கழக தேசிய இனவியல் அருங்காட்சியக சிறப்பு நிலைப் பேராசிரியா் தெரடா யோஷிடகா பங்கேற்று, ஜப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடா்புகள் குறித்து விளக்கிக் கூறினாா்.

கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியா் த. செபஸ்தி ஜான்பாஸ்கா் தலைமை வகித்தாா். தமிழாய்வுத் துறைத் தலைவா் சு. தமிழ்வேலு முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் ந. சரவணன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சு. ரமேஷ் நன்றி கூறினாா்.

இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க இணை ஒருங்கிணைப்பாளா்கள் சியாமளா ஜகதீஸ்வரி, க. பாலமுருகன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். தமிழாய்வுத்துறை மாணவ-மாணவியா்கள், பிற துறைப் பேராசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT