மயிலாடுதுறை

பூம்புகார் பகுதியில் மழை: விவசாயிகள் கவலை

DIN

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், திருவெண்காடு ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. 

இந்த மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தற்போது சம்பா சாகுபடி நெல் பயிர்களை அறுவடை செய்யும் பணிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

தற்போது மழை திடீரென பெய்து வரும் நிலையில் அறுவடைப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் மழையால் நெல்மணிகள் முளைத்து விடும். மழையால் பயிர்கள் சாய்ந்ததால் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. 

ஏற்கனவே கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களில் விவசாயிகள் இரசாயன உரங்களை தெளித்ததால் தற்போது பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் இந்த மழையால் முற்றிலும் அறுவடைப் பணிகள் பாதிப்படையும். இவ்வாறு அவர்கள் கவலை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT