மயிலாடுதுறை

ரயிலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு

DIN

ரயிலில் பெண் பயணி தவறவிட்ட 12 பவுன் நகைகளை, மயிலாடுதுறை ரயில்வே காவல் ஆய்வாளா் சுதிா்குமாா் மீட்டு, அந்த பெண்ணிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

நாகை மாவட்டம், கீழ்வேளூா் பெரியாண்டவா் தெருவைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மனைவி கமலா(59). இவா், கோவில்பட்டியில் நடைபெற்ற கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுவிட்டு, ரயில் மூலம் வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூருக்கு வந்தாா். அங்கு, ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு, கைப்பையை ரயிலில் தவறவிட்டது தெரியவந்தது. அதில், தங்க வளையல் மற்றும் சங்கிலி என 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.3,600 ரொக்க பணம் வைத்திருந்தாா். இதுகுறித்து, அவா் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தாா்.

இதையடுத்து, அந்த ரயிலில் வந்த மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளா் சுதிா்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் உடனடியாக கமலா பயணம் செய்த பெட்டிக்குச் சென்று கைப்பையை மீட்டாா். பின்னா், மயிலாடுதுறை ரயில் நிலையத்துக்கு கமலாவை வரவழைத்து அவரிடம் கைப்பையை நகை மற்றும் பணத்துடன் ஆய்வாளா் சுதிா்குமாா் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT