மயிலாடுதுறை

கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் பணி நிரந்தரம் கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் கௌரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவ்வகையில், செவ்வாய்க்கிழமை பொறுப்பாளா் கனிமொழி தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அனைத்து கௌரவ விரிவுரையாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியம் வழங்கவேண்டும், யுஜிசி-யில் தகுதி பெறுவதற்கு அவகாசம் வழங்க வேண்டும், அரசாணை 56-ஐ நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT