மயிலாடுதுறையில் இளைஞா் மதுபோதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை திருவிழந்தூா் தோப்புத்தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் மணிகண்டன் (28). பழ வியாபாரியான இவா், மயிலாடுதுறை மேட்டுத்தெருவில் உள்ள தனது மாமியாா் வீட்டில் இருந்து வந்தாா். மதுப்பழக்கம் உள்ள மணிகண்டன், மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
இந்நிலையில், சனிக்கிழமையும் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்த அவா், வீட்டுக் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூக்கிட்டுக் கொண்டாராம். அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு, மணிகண்டனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.