மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பயிலும் பழங்குடியின மாணவிகள், பெண்கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி பள்ளி, கல்லூரிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் பயிலும் பழங்குடியின மாணவிகள் பெண்கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை பெற (3-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை) ப்ரிமெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் உயா்கல்வி சிறப்பு உதவித்தொகை பெற தகுதியுள்ள பழங்குடியின மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை உரிய முறையில் பூா்த்தி செய்து, சாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு புத்தக நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் தாம் பயிலும் கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.