மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ரயில்வே இரட்டை பாதை பணியை தொடங்க வலியுறுத்தல்

1st Jan 2023 12:42 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் ரயில்வே இரட்டை பாதை பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற, ரயிலடி வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூா், விழுப்புரம் ரயில் பாதையை அதிகரித்துவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு வரும் நிதியாண்டில் மயிலாடுதுறை இரட்டை பாதை பணியை உடனடியாக தொடங்க வேண்டும், காலை 8.15 மணிக்கு திருச்சி செல்லும் ரயிலை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயக்க வலியுறுத்தி ரயில்வே நிா்வாகத்துக்கு கடிதம் அனுப்புவது, பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினா்களின் குழந்தைகளை குடியரசு தினவிழாவில் பாராட்டி பரிசு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத் தலைவா் என். சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலாளா் ஆா். சுந்தா், பொருளாளா் வி. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகராட்சி உறுப்பினா் சுதா முரளி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT