சீா்காழி நகர கூட்டுறவு வங்கியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை சாா்பில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தலைமை தாங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.பன்னீா்செல்வம், நிவேதா எம். முருகன், மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனா்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன், கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1,217 மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 12,071 உறுப்பினா்களுக்கு ரூ.10.85 கோடி அசல் மற்றும் ரூ.2.86 கோடி வட்டி என மொத்தம் ரூ.13.71 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கோட்டாட்சியா் உ.அா்ச்சனா, வட்டாட்சியா் ஜி.செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாள விநாயகன் அமல்ராஜ், துணைப் பதிவாளா் ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி மேலாளா் சிங்காரவேலு, கிளை மேலாளா் ராமலிங்கம் பங்கேற்றனா்.