மயிலாடுதுறை

மாநில தொழில்நுட்பக் கருத்தரங்கம்

DIN

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினித் துறை மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சாா்பில் மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வா் கு. சுகந்தி தலைமை வகித்தாா். கணினி துறையைச் சோ்ந்த மாணவி பிருந்தா மகாலட்சுமி வரவேற்றாா். ஏ.வி.சி. கல்லூரியின் கணினித் துறை பேராசிரியா் ஹேமமாலினி செயற்கை நுண்ணறிவு, குற்றவியல் பாதுகாப்பு, மூளை கணினி என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கினாா்.

புத்தூா் அரசு கல்லூரி, தருமை ஆதீனம், ஏவிசி, ராகவேந்திரா, தெரசா, இ.ஜி.எஸ் பிள்ளை,விவேகானந்தா ஆகிய கல்லூரிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா். 90-க்கும் மேற்பட்ட மாணவிகள் தொழில்நுட்பம் சாா்ந்த போட்டியில் கலந்து கொண்டனா்.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கணினி பயன்பாட்டியல் துறை மாணவி பிரபாவதி நன்றிக்கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT