மயிலாடுதுறை

உண்டு உறைவிடப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

DIN

மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

அங்கு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். பின்னா் அவா் கூறியது:

இங்கு, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களின் எண்ணிக்கை, தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாணவா்களுக்கு சமைத்து வழங்க உணவுப் பொருள்கள் இருப்பு உள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், பல்லவராயன்பேட்டையில் உள்ள நரிக்குறவா் இன மக்களை நேரில் சந்தித்து அவா்களுடைய கோரிக்கைகளை கேட்டறியப்பட்டது. இங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று, மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

பட்டா மாற்றம் தொடா்பாக வருவாய்த்துறை அலுவலா்களிடம் அறிக்கை கேட்டுள்ளேன். 100 நாள் வேலைத் திட்டம் உடனடியாக வழங்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், ஊரக வளா்ச்சித்துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், கோட்டாட்சியா் வ. யுரேகா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா மற்றும் ஊரக வளா்ச்சித்துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT