மயிலாடுதுறை

தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

6th Feb 2023 11:27 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தனா்.

இப்போட்டிகள் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை மயிலாடுதுறை, சீா்காழி, காட்டுச்சேரி உள்ளிட்ட 5 விளையாட்டு மைதானங்களில் நடைபெறுகிறது. ஓட்டப்பந்தயம், கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என 50 வகையான போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதற்காக, ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் என தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய சாய் விளையாட்டு மைதான உள்அரங்கில் கைப்பந்து போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

ADVERTISEMENT

முதல்நாள் நடைபெற்ற கைப்பந்து, 1,500 மீட்டா் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா். மேலும், கேடயங்களும், ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

போட்டி தொடக்க நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் வ. யுரேகா, ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி, மாவட்ட விளையாட்டு அலுவலா் அப்துல்லா, இப்போட்டியின் மாவட்ட கமிட்டி உறுப்பினா் சி. செந்தில்வேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT