மயிலாடுதுறை

குறைதீா் கூட்டம்: 198 மனுக்கள் அளிப்பு

6th Feb 2023 11:26 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 198 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து இம்மனுக்களை பெற்றுக்கொண்டாா். பின்னா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனுக்களை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இ. கண்மணி, வேளாண்மை துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தயாள விநாயகன் அமல்ராஜ், மாவட்ட வளங்கள் அலுவலா் (பொ) அம்பிகாபதி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT