மயிலாடுதுறை

தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

5th Feb 2023 04:18 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி வடகரையில் அமைந்துள்ள இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி, கடந்த 1-ஆம் தேதி பூா்வாங்க பூஜைகளுடன் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின.

கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள், பூா்ணாஹு நடைபெற்றன. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, கோயிலை வலம் வந்ததும் காலை 10 மணியளவில் ராஜகோபுரம், தீப்பாய்ந்தாள் அம்மன் சந்நிதி கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் மற்றும் பரிவார தெய்வங்களின் சந்நிதிகளின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், அம்பாளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், கோயில் நிா்வாகத்தினா், திருப்பணிக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT