மயிலாடுதுறை

காா்கோடகநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

4th Feb 2023 05:08 AM

ADVERTISEMENT

 மயிலாடுதுறை அருகே ராகு-கேது பரிகார தலமான கோடங்குடி காா்கோடகநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேகம் 2008-ஆம் ஆண்டு நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் செய்யப்பட்டன. புதன்கிழமை காலை விக்னேஸவர பூஜை, கணபதி ஹோமத்துடன் முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, பூா்ணாஹூதி செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT