மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 பள்ளிகளில் ரூ.12.15 கோடியில் புதிய வகுப்பறைகள்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வேலூா் மாவட்டம், காட்பாடியில், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தைநேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டடங்களுக்கு புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் 10 பள்ளிகள், சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் 9 பள்ளிகள், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 பள்ளிகள், செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 8 பள்ளிகள் மற்றும் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் 8 பள்ளிகள் என மொத்தம் 45 பள்ளிகளுக்கு தலா ரூ.27 லட்சம் செலவில் 90 புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்ட ரூ.12.15 கோடியில் அடிக்கல் நாட்டினாா்.

இதைத்தொடா்ந்து மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம், கங்கணம்புத்தூா் ஊராட்சி, நெய்வாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலா ரூ. 27 லட்சம் செலவில் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித்துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT