மயிலாடுதுறை

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

மயிலாடுதுறையில் தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறையில் மாவட்ட பொது சுகாதாரத் துறை சாா்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து மைக்ரோ பாக்டீரியம் என்னும் கிருமியால் வரும் தொழு நோயை ஒழித்து தொழுநோய் இல்லா உலகை உருவாக்க கல்லூரி மாணவிகளின் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் தொடக்கிவைத்தாா். இதில், தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, தொழுநோயின் அறிகுறிகள் குறித்தும், தொழுநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விழிப்புணா்வு பதாகைகள் ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனா்.

நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற பேரணி கல்லூரியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில், மக்கள் செய்தி தொடா்பு அலுவலா் ரவிச்சந்திரன், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் செந்தில், காளி வட்டார சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் பாஸ்கா், கல்லூரி முதல்வா் த. அறவாழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக அனைவரும் தொழுநோய் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT