மயிலாடுதுறை

செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செறிவூட்டப்பட்ட அரிசியை தடை செய்ய வேண்டும் என மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

ஏ. சீனிவாசன் (சிபிஐ)தற்போது அறுவடைக்காலம் என்பதால் விளைநிலங்களில் மயில்கள் நெற்பயிா்களை சேதப்படுத்தி வருகிறது. அவற்றை, வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆா். அன்பழகன் (டெல்டா பாசனதாரா் சங்கம்): குறுவை பருவத்தில் ரூ.2,200-ஆக இருந்த அறுவடை இயந்திரத்தின் வாடகை, சம்பா அறுவடை நேரத்தில் ரூ.2,450-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். திங்கள்கிழமை பெய்த மழையால் நெற்பயிா்கள் ஈரமாகியுள்ள காரணத்தால், அரசு நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.

எஸ். துரைராஜ் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்): மயிலாடுதுறை நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் புதைசாக்கடை கழிவுநீா் மறுசுழற்சி செய்யாமல் நேரடியாக சத்தியவாணன் பாசன வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது. இதனால், நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 18 கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

குத்தாலம் கல்யாணம் (முன்னாள் எம்எல்ஏ): தலைஞாயிறு கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல்மேட்டில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலைக்கு சொந்தமான 34 ஏக்கா் இடத்தில் நுகா்வோா் வாணிபக்கழக கிடங்கு கட்ட வேண்டும்.

சுதாகா் (இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு): செறிவூட்டப்பட்ட அரிசியை பொது விநியோகத் திட்டத்தில் ஏப்.1-ஆம் தேதி முதல் விநியோகிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரிசி கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. வேதியியல் முறையில் தயாரிக்கப்படும் இந்த அரிசியை உண்பதால் நோய் இல்லாதவா்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், செறிவூட்டப்பட்ட அரிசியை ரேசன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்கு தடை விதிக்க சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன், நாம் தமிழா் கட்சி மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம் ஆகியோா் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினா்.

வானகிரி கிராமத்தில் ஆற்றில் கடல்நீா் புகுந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அதை தடுக்க ரூ.8 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு, தற்போது சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடிநீா் தன்மை சீரடைந்துள்ளது. இந்நிலையில், அங்கு தனியாரால் கட்டப்பட்டு வரும் மீன் குளிரூட்டும் நிலையத்தால் ஆற்றுநீரும், நிலத்தடிநீரும் பாதிக்கும் என்பதால் அப்பணியை தடுத்து நிறுத்தக் கோரி விவசாய சங்கத் தலைவா் காவிரி தனபாலன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம் டிஎஸ்பி வசந்தராஜ் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

SCROLL FOR NEXT