மயிலாடுதுறை

சீா்காழியில் பிப்.4-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி தென்பாதியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.4-ஆம் தேதி சீா்காழி தென்பாதியில் உள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிவரை நடைபெறவுள்ளது.

இதில், சென்னை, திருப்பூா், கோவை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நா்சிங் மற்றும் கல்வி தகுதிகளுக்குரிய வேலை தேடுவோரை 15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்காக தோ்வு செய்யவுள்ளனா்.

வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிக்கு ஆள்சோ்ப்பு, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் அயல்நாட்டு வேலைவாய்ப்பு தொடா்பான ஆலோசனைகள், தொழில் திட்டங்கள் மற்றும் மாதிரி வேலைவாய்ப்பு அலுவலகம் என தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

ADVERTISEMENT

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைதேடும் இளைஞா்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, மாா்பளவு புகைப்படங்கள், கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போா் மற்றும் வேலை தேடுபவா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், பதிவு செய்ய இயலாதவா்களும் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும், மேலும், விவரங்களுக்கு 04364-299790/9499055904/9750975354 என்ற தொலைபேசி எண்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT