மயிலாடுதுறை

சீா்காழியில் திருமுலைப்பால் ஐதீக விழா

26th Apr 2023 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி சட்டநாதா்சுவாமி கோயிலில் திருமுலைப்பால் ஐதீக விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதா் சுவாமி கோயிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகிறாா். இக்கோயிலில் காசிக்கு இணையாக அஷ்ட பைரவா்கள் தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா்.

இத்தலத்தில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய நிகழ்வு திருமுலைப்பால் விழாவாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வரும் மே மாதம் 24-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதை ஒட்டி கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மிக எளிமையாக திருமுலைப்பால் விழா நடந்தது.

முன்னதாக தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் முன்னிலையில் மலைக்கோயிலில் உள்ள தோணியப்பா் உமாமகேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

ADVERTISEMENT

ஆதீனம் திருக்கரத்தால் பட்டுவஸ்திரம் வழங்கி சுவாமிக்கு சாத்தப்பட்டு பால் வைத்து நிவேதித்து தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் உமாமகேஸ்வரிஅம்மனிடமிருந்து பொற்கிண்ணத்தில் ஞானப்பால் எடுத்துவரப்பட்டு கீழ் பிரகாரத்தில் நாயனாா் மண்டபத்தில் சிறப்பு மலா்கள் அலங்காரத்தில் எழுந்தருளிய திருஞானசம்பந்தா்பெருமானுக்கு சிவாச்சாரியாா்கள் ஞானப்பால் வழங்கி, தேவார திருப்பதிகங்கள் பாடி மகாதீபாராதனை திருமுலைப்பால் ஐதீக விழா நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பக்தா்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT