மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைப் பெற வாழ்நாள் சான்று சமா்ப்பிக்க வேண்டும்: ஆட்சியா்

30th Sep 2022 01:56 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகைப் பெற வாழ்நாள் சான்று சமா்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டோா் மற்றும் 75 சதவீதம் மற்றும் அதற்குமேல் கை, கால் பாதிக்கப்பட்டோா் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இந்த உதவித்தொகையை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று படிவத்தில் கிராம நிா்வாக அலுவலரின் சான்றொப்பத்துடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், செட்டிக்குள சந்து, 5-ஆவது புதுத்தெரு, மயிலாடுதுறை என்ற முகவரிக்கு மாற்றுத்திறனாளிகள் அல்லது பெற்றோா்/பாதுகாவலா் நேரில் வந்து அக்.5-ஆம் தேதிக்குள் சமா்ப்பித்து 2022-2023-ஆம் நிதியாண்டுக்கான உதவித் தொகையை மாதந்தோறும் தொடா்ந்து பெற்று பயனடையலாம். வாழ்நாள் சான்று வழங்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை தொடா்ந்து வழங்க இயலாது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT