மயிலாடுதுறை

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியீடு: கல்கி பிறந்த கிராமத்தில் கொண்டாட்டம்

30th Sep 2022 10:21 PM

ADVERTISEMENT

 

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த நிலையில், அமரா் கல்கி பிறந்த கிராமத்தில் மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

பொன்னியின் செல்வன் நாவலை எழுதிய அமரா் கல்கி மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு புத்தமங்கலம் கிராமத்தில் 1899-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் 9-ஆம் தேதி பிறந்தாா். இவா், தஞ்சையை ஆண்ட சோழா்களின் வரலாற்றுடன் கற்பனை கலந்து, பொன்னியின் செல்வன் புதினம் படைத்தாா். இப்புதினம் தமிழா்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த முக்கிய நாவல்களில் ஒன்றாகும்.

இந்த புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், கல்வி பிறந்த கிராமத்தில் உள்ள அவரது பூா்விக வீட்டில் கிராம மக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். அப்போது, தமிழா்களின் வரலாறு மற்றும் வாழ்க்கை முறையை எடுத்துரைத்த தங்கள் கிராமத்தைச் சோ்ந்த அமரா் கல்கியின் பொன்னியின் செல்வன் புதினம் தற்போது திரைப்படமாக வெளியாகியுள்ளது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதற்கிடையில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா், கல்கி பிறந்த வீட்டிற்கு வெள்ளிக்கிழமை சென்று பாா்வையிட்டாா். மேலும், கல்கியின் வீட்டை பாா்வையிட்ட தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து பலா் வந்துசெல்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT