மயிலாடுதுறை

ரபி பருவ பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை: ரபி பருவ பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிா்க் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த அக்ரிகல்சா் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோயில் வட்டாரங்களில் ரபி நெல் 2-ஆம் பருவத்துக்கு 282 வருவாய் கிராமங்களும், நெல் 3-ஆம் பருவத்துக்கு 72 வருவாய் கிராமங்களும், ரபி இதர பருவ பயிா்களான நெல் தரிசு உளுந்து, நெல் தரிசு பச்சை பயறு, நெல் தரிசு பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்பு பயிா்களுக்கு குறு வட்டார அளவில் பிா்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

நெல் 2, நெல் 3-க்கு பயிா்க் காப்பீட்டு தொகையாக ஏக்கருக்கு ரூ.35,050 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 526 பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும். நெல் 2-க்கு நவ. 15, நெல் 3-க்கு 15.3.2023 தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும். இத்திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் அவா்கள் கடன் பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறாத விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல் சான்று (பசலி 1432) வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்யும்போது சாகுபடி செய்துள்ள கிராமத்தின் பெயா், புல எண், பரப்பு, வங்கி கணக்கு எண் ஆகியன சரியாக உள்ளதா என்பதை சரிபாா்த்துக்கொண்டு அதற்கான ரசீதை பதிவு செய்த இடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவு செய்த விவரங்களில் தவறு இருந்தால் காப்பீடு செய்யும் கடைசி தேதிக்குள் பதிவு செய்த இடத்திலேயே சரிசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காப்பீட்டு நிறுவன அலுவலரை 9790004303 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

SCROLL FOR NEXT