மயிலாடுதுறை

போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி தொடக்கம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் புதன்கிழமை தொடங்கிய போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பணியாளா் தோ்வு வாரியத்தால் (எஸ்எஸ்சி) ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தர (சிஜிஎல்) தோ்வு மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள குரூப் ‘பி‘ மற்றும் குரூப் ‘சி‘ பணியிடங்களான உதவியாளா், வருமான வரித் துறை ஆய்வாளா், இளநிலை புள்ளியல் அலுவலா், தணிக்கையாளா், அஞ்சலக உதவியாளா், கணக்காளா், உதவி அமலாக்க அலுவலா், உதவி தணிக்கை அலுவலா், உதவி கணக்கு அலுவலா் உள்ளிட்ட 35 வகையான 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

இப்பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் கல்லூரி இளங்கலை இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். 8.10.2022-க்குள் இத்தோ்வுக்கு தேவையான கல்வித் தகுதியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தோ்வுக்கான வயது வரம்பு 18 முதல் 30 வரை. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பட்டியல் பிரிவினா் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளா்வு உண்டு.

இத்தோ்வுக்கு அக்.8-ஆம் தேதிக்குள் ள்ள்ஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் எனும் தோ்வு வாரிய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. எனினும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினா், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் பெயா், முகவரி, வாட்ஸ்-ஆப் கைப்பேசி எண் மற்றும் கல்வித் தகுதியை குறிப்பிட்டு 6383489199 என்ற கைப்பேசி எண்ணுக்கு வாட்ஸ் -ஆப் மூலமாகவோ அல்லது 04364-299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, மயிலாடுதுறை, பாலாஜி நகா், பூம்புகாா் சாலை 2-ஆவது குறுக்குத் தெருவில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT