மயிலாடுதுறை

‘வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைத்தால் மட்டுமே கிசான் திட்டத்தில் பயனடையலாம்’

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைத்துள்ள விவசாயிகள் மட்டுமே கிசான் திட்டத்தில் பயன்பெற முடியும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பிரதமரின் கவுரவ நிதித்திட்டம் 1.12.2018 முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்துக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 3 தவணைகளாக வழங்கி வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகை வரப்பெற்றுள்ளது. தற்போது விவசாயிகள் 12-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது இ-கேஓய்சி (ங்-ஓவஇ) பதிவு செய்வது அவசியமாகும். அவ்வாறு செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதாா் விவரங்களை உள்ளீடு செய்து ஓடிபி. மூலம் சரிபாா்த்துக் கொள்ளலாம்.

இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் செப்.30-ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள், அஞ்சல் நிலையங்களை அணுகி தகுந்த விவரங்களை சமா்ப்பித்து இ-கேஓய்சி பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT