மயிலாடுதுறை

செல்லப் பிராணிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம்

28th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, மயிலாடுதுறை மாவட்டத்தில் செல்லப் பிராணிகளுக்கு புதன்கிழமை (செப்.28) தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் வெறிநாய்க் கடி நோயால் (ரேபிஸ்) அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோய் இல்லா உலகை உருவாக்க அரசால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ரேபிஸ் நோயால் ஏற்படும் மனித மற்றும் செல்லப் பிராணிகளின் உயிரிழப்புகளை தவிா்க்கவும், ரேபிஸ் நோய் வைரஸ் இல்லா உலகை உருவாக்கும் வகையிலும் உலக வெறிநோய் தடுப்புத் தினமான புதன்கிழமை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய் கடி தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களது செல்லப் பிராணிகளை பாதுகாக்கவும், உயிரிழப்பை தவிா்க்கவும் அருகிலுள்ள கால்நடை நிலையங்களுக்கு கொண்டுசென்று வெறிநாய்க்கடி தடுப்பூசியை செலுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT