மயிலாடுதுறை

அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம்சிறப்பாக பணியாற்றியவா்களுக்குப் பாராட்டு

27th Sep 2022 05:16 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ் தலைமை வகித்து, தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்ட 5 நோயாளிகளுக்கு பரிசு மற்றும் 5 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றை வழங்கினாா்.

மேலும், சிறப்பாக பணியாற்றிய மருத்துவ காப்பீட்டு தொடா்பு அலுவலா்கள், மருத்துவா்கள், வாா்டு மேலாளா்களுக்கு சான்றிழ்களை வழங்கினாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஆா். ராஜசேகா், குடிமுறை மருத்துவ அலுவலா்கள் செந்தில்குமாா், அருண்ராஜ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT